UMARTHAMBI

Sunday, August 27, 2006

<<>>உமர் கணிணியுலகுக்கு அளித்த கொடைகள்<<>>

His Contributions to Tamil Computing












<> UMAR<>

[June 15,1953 - July 12,2006]


AWC Phonetic Unicode Writer
Online RSS Generator - can be used in offline as well
RSS Creator [1][2]
Unicode Encoded String to Unicode Reader
Save Tamil documents in ASCII format
Convert any Tamil font encoding to Unicode [1][2]
Unicode converter [1][2]
GnuPublic License Fonts [1][2]
Thenee Unicode Tamil Font[1][2][3]
Dynamic Tamil font for Websites [12][13]
Vaigai Dynamic Font
Tamil Email

Tamil Unicode Toolbar for Browser
Uniwriter
And many more tools which are lost over time :-(

<<>>விக்கிபீடியாவில் உமர் தம்பி<<>>

உமர் தம்பி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உமர் தம்பி அவர்கள் தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கிய ஆளுமைகளுள் ஒருவராவார்.
இவர் கணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு உதவக்கூடிய பல செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும் ஆக்கியளித்துள்ளார்.

உமர் தம்பி
பொருளடக்கம்[மறை]
1 வாழ்க்கைக் குறிப்பு
2 தமிழ் கணிமைக்கு செய்த பங்களிப்புகள்
2.1 தேனீ இயங்கு எழுத்துரு
2.2 தமிழ் இணைய அகராதி
3 பங்கு பற்றிய இணையத்தளங்கள்/சேவைகள்
4 சமுதாயப் பணிகள்/கட்டுரைகள்
5 வெளி இணைப்புக்கள்
5.1 உமர் தம்பி உருவாக்கிய செயலிகளும் கருவிகளும்
5.2 உமர் தம்பி அவர்களுடன் தொடர்புடைய வலைத்தளங்கள்
5.3 உமர் தம்பி அவர்களின் வலைப்பதிவு
5.4 உமர் தம்பியின் ஆக்கங்கள்
5.5 உமர் தம்பி பற்றிய பிறரது எழுத்துக்கள்
//
[தொகு]

வாழ்க்கைக் குறிப்பு
தோற்றம்:15.06.1953
மறைவு : 12.07.2006
பிறப்பிடம் - தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணம்
பெற்றோர் - அ..அப்துல் அமீது - ரொக்கையா
தனது துவக்கக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியையும் அதிராம்பட்டிணத்திலும், தனது Bsc (விலங்கியல்) பட்ட படிப்பினை அதிராம்பட்டிணத்தில் உள்ள காதர் மொஹைதீன் கல்லூரியில் படித்தார்கள்.
அதன் பின் இலத்திரனியலில் டிப்ளோமா படிப்பினையும் முடித்த உமர் தனது ஊரிலேயே 1983 ஆம் ஆண்டு வானொலி, தொலைக்காட்சி பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்துள்ளார்.
மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார். அந்த ஆர்வத்தால், மாணவப் பருவக் குறும்பாக, ஒருமுறை தான் பயின்ற காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி அதிராம்பட்டினத்திலிருப்போர்கள் கேட்கும்படியாக உரையாடல்களை ஒலிபரப்பியிருக்கிறார்.
இப்படியான ஆர்வத்தால் அவரது தொழிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் பணியாகவே அமைந்து, 1984 ஆம் ஆண்டு துபாயில் உள்ள Alfuttaim Group of Companies ல் இலத்திரனியல் உபகரணங்களுக்கான National Panasonic பழுது நீக்கும் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.
கல்வி பயிலும் காலகட்டத்திலேயே 1977 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடைபெற்றது அவரது மனைவியின் பெயர் பெளஷியா (Fouzia). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
முறையாக எந்த கல்லூரியிலும் கணினி தொழில் நுட்பத்தை பயிலாத உமர் அவர்கள், துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார்.
துபாயில் தான் பணிபுரிந்துவந்த நிறுவனத்தில் சில நாட்களிலேயே கணினி நுட்பவல்லுனரானார். Network administrator, SAP implementation team Head, Kiosk programmer எனக் கணினித் துறையில் திறம்பட பணியாற்றியிருக்கிறார்.
ஒரு குழுவை முன்னின்று நடத்துவது வரையில் அவரது பதவி உயர்வு நிகழ்ந்திருக்கிறது. பதினேழு ஆண்டுகளாக துபாயில் இந்தப் பணியைச் செய்த அவர், அவர் 2001 மாவது ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று தாயகம் திரும்பினார்.
தாயகம் திரும்பிய அவர் தனது ஊரிலிருந்து கொண்டே தனது மூத்த மகன் மொய்னுதீனுடன் இணைந்து சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கிவரும் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்கும் (மாருதி கார்) நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும் விற்பனைக்கான மென்பொருட்களை வடிவமைத்து கொடுத்து பராமரித்து வந்துள்ளார்கள்.
[தொகு]

தமிழ் கணிமைக்கு செய்த பங்களிப்புகள்
[தொகு]

தேனீ இயங்கு எழுத்துரு
மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தயாரிப்பு உலாவிகளில் மட்டும் தொழிற்படக்கூடிய வெஃப்ட் என்ற தொழிநுட்பத்தை பயன்படுத்தி, தமிழ் எழுத்துரு கணினியில் நிறுவப்படாத நிலையிலும் கூட தமிழ் ஒருங்குறி எழுத்துக்களாலமைந்த இணையத்தளங்களை மைக்ரோசொஃப்ட் உலாவிகளில் படிக்கும் வசதியை இவ்வெழுத்துரு வழங்குகிறது. தேனீ எனப்படும் இவரது தயாரிப்பான எழுத்துருவை இவ்வாறு இயங்கு எழுத்துருவாக பல்வேறு இணைய முகவரிகளில் பயன்படுமாறு மாற்றி வெளியிட்டார். இன்று தமிழ் வலைப்பதிவு உலகில் பெரும்பாலானவர்கள் இந்த வசதியை தமது வலைப்பதிவுகளில் கொண்டிருக்கிறார்கள்.
[தொகு]

தமிழ் இணைய அகராதி
கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து வழங்க முடிவெடுத்த சகோதரர் உமர் அவர்கள் தமிழ் இணைய அகராதியைக் கொண்டுவந்தார். இந்த அகராதியை தமிழ் உலக உறுப்பினரும் talktamil.4t.com என்ற இணையத் தள நிர்வாகியான மஞ்சு அவர்களும் இணைந்துஉருவாக்கினார்கள்
[தொகு]

பங்கு பற்றிய இணையத்தளங்கள்/சேவைகள்
தமிழ் மணம்
தமிழ் உலகம் குழுமம்
ஈ உதவி குழுமம்
ஒருங்குறி குழுமம்
அறிவியல் தமிழ் குழுமம்
[தொகு]

சமுதாயப் பணிகள்/கட்டுரைகள்
சமூக சிந்தனையும், சமூக அக்கறையும் கொண்ட சகோதரர் உமர் அவர்கள் அதிரை பைத்துல்மால் எனும் சமுதாய சேவை செய்யும் அறக்கட்டளையில முக்கிய நிர்வாகியாக இருந்து சேவை செய்து வந்துள்ளார்கள்.
குழம்பி நிற்கும் குமுகாயம்
நமக்கு கண்கள், செவிகள் இரண்டிரண்டு ஏன்?
தவிடுபொடியாகிறது டார்வின் கொள்கை
காரியம் சிறிது, காரணம் பெரிது 3
காரியம் சிறிது காரணம் பெரிது -2
காரியம் சிறிது, காரணம் பெரிது
[தொகு]

வெளி இணைப்புக்கள்
[தொகு]

உமர் தம்பி உருவாக்கிய செயலிகளும் கருவிகளும்
AWC Phonetic Unicode Writer
Online RSS creator - can be used in offline as well
RSS செய்தியோடை உருவாக்கி [1][2]
எண்களாக தெரியும் ஒருங்குறி எழுத்துக்களை படிப்பதற்கான செயலி
தமிழை ASCII வடிவில் டேட்டாபேஸில் சேமிக்கும் கருவி
எல்லாவகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி [3][4]
ஒருங்குறி மாற்றி [5][6]
க்னூ பொதுமக்கள் உரிம அடிப்படையில் வெளியிடப்பட்ட எழுத்துருக்கள் [7][8]
தேனீ ஒருங்குறி எழுத்துரு[9][10][11]
வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு[12][13]
வைகை இயங்கு எழுத்துரு
தமிழ் மின்னஞ்சல்
தமிழ் ஒருங்குறி Toolbar for உலாவி
Uniwriter (உலாவியில் Tools மெனுவில் சேர்க்கப்படும்)
[தொகு]

உமர் தம்பி அவர்களுடன் தொடர்புடைய வலைத்தளங்கள்
தமிழ் இணைய அகராதி
மின்னஞ்சலில் திருக்குர்ஆன்
தமிழன் வாக்கு
[தொகு]

உமர் தம்பி அவர்களின் வலைப்பதிவு
தென்றல்
[தொகு]

உமர் தம்பியின் ஆக்கங்கள்
எழுதப்பழகுவோம் எச்.ரி.எம்.எல்
யுனிகோடும் இயங்கு எழுத்துருவும்
யுனிகோடும் தமிழ் இணையமும்
யுனிகோடின் பன்முகங்கள்
RSS ஓடை-ஒரு அறிமுகம்
தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு
முத்தமிழ்மன்றம்]
[தொகு]

உமர் தம்பி பற்றிய பிறரது எழுத்துக்கள்
உமர்தம்பி பற்றிய வலைப்பதிவு
யுனிகோடு உமர் அவர்களின் மறைவு - அதிரைக்காரன்
'யூனிகோட்' உமர்தம்பி மரணமடைந்தார்கள் -adirai.com
உமர் தம்பி - தமிழ்க் கணிமைக் கொடையாளர் -காசி
ஒருங்குறி (Unicode) எழுத்துரு முன்னோடி உமர்தம்பி மறைந்தார் - சத்தியமார்க்கம்.காம்
வாசனின் வலைப்பதிவு
யுனிகோடு உமர் அவர்களின் மறைவு -முஃப்தி
உமர் தம்பி மறைவு -முகுந்த்
உமர் தம்பி -வாசன்
உமர் தம்பி காக்கா(அண்ணன்) - என் நினைவுகள் -மாஹிர்
தேனீ உமருக்கு அஞ்சலி -மதிகந்தசாமி
'THEENE.eot' உமர் மறைவு -தேசிகன்
திரு. உமர் மரணம் -க்ருபா
யுனிகோட் உமர் தம்பி மரணம் -அபூ முஹை
நண்பர் உமர் மறைவு -வெங்கட்
அஞ்சலி தேனீ உமர் -பரி
அஞ்சலி தேனீ உமர் -டுபுக்கு
Deep Condolences -பிரகாஷ்
'தேனீ' உமர் மறைவு - கேட்டவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.-ஆசாத்
உமர் -சுரேஷ்
e-வீதியில்: யுனிகோடு உமர் அவர்களின் மறைவு -மா.சிவகுமார்
உமருக்கு அஞ்சலி -மணியன்
தமிழ் வலையுலகின் இழப்பு 'தேனீ உமர் தம்பி' -இறை நேசன்
Tiru. Umarthambi - sad news -ஒருங்குறி வலைக்குழுமம்
Tiru. Umarthambi - sad news -தமிழ்மணம் வலைக்குழுமம்

Saturday, August 26, 2006

<<>>உமர் செயலிகள் பட்டியல்<<>>

உமர் உருவாக்கிய செயலிகள் பட்டியல் இதோ:-

Roman to Uni:- Type & convert

http://www.geocities.com/csd_one/AWCUniWriter.html

Online RSS creator - can be used in offline as well

http://www.geocities.com/csd_one/RSS_generator.html

RSS creator program

http://www.geocities.com/csd_one/SRSS.ziphttp://mathy.kandasamy.net/unicode/SRSS.zip

Read Unicode text which appeared as a stream of numbers

http://www.geocities.com/csd_one/UniTag2U.htm

Any to Uni: Any encoding to unicode converter

http://www.geocities.com/csd_one/A2Usetup.ziphttp://mathy.kandasamy.net/unicode/A2Usetup.zip


Onscreen Unicode converter

http://www.geocities.com/csd_one/UniConMagz.ziphttp://mathy.kandasamy.net/unicode/UniConMagz.zip

A set of GP Licenced fonts

http://www.geocities.com/csd_one/fonts/GPLfonts.ziphttp://mathy.kandasamy.net/unicode/GPLfonts.zip

Thenee Unicode font

http://www.geocities.com/csd_one/fonts/TheneeUniTx.ziphttp://mathy.kandasamy.net/unicode/TheneeUniTx.zip


An universal dynamic font link that works for all websites & Blogs

http://www.geocities.com/csd_one/umar/THENEE.eot


Another Universal dynamic font as same as Thenee


http://www.geocities.com/csd_one/umar/VAIGAIU0.eot

Friday, August 25, 2006

<<>>புதிய உமர் எழுத்துரு<<>>

புதிய உமர் எழுத்துரு.


தமிழ் கம்பியூட்டர் பத்திரிகையை நான் கம்பியூட்டர் வாங்குவதற்கு
முன் (?) சந்தாகட்டி வாங்கிக் கொண்டிருந்தேன். சந்தா தீர்ந்த பிறகு புதுப்பிக்காமல் விட்டு விட்டேன். தமிழில் கம்பியூட்டர் பத்திரிகை நடத்தினாலும் இதழுக்கு இணைய தளமோ மின்னஞ்சல் முகவரியோ இல்லை. சந்தா கட்டுவதற்கும் புராதன வழிமுறைகள் தவிர வேறு வழியில்லை.
ஒருமுறை நண்பர் அழகி விஸ்வநாதன் தமிழ் கம்பியூட்டர் இதழுடன் பனாசியா நிறுவனத்தின் இலவச மென்பொருட்கள் அடங்கிய குறுவட்டு இணைத்து வழங்கப்பட்டிருப்பதாக மின்மடல் அனுப்பியிருந்தார். சரியான நேரத்தில் அவரது மடல் வந்ததால் தீர்ந்து போவதற்குள் இதழ் பிரதியை குறுவட்டுடன் வாங்க முடிந்தது.
அந்த குறுவட்டில் பல திறமூல மென்பொருட்களும் ஏராளமான தாம் (Tam) குறியேற்ற எழுத்துருக்களும் இருந்தன. கூடவே மென்பொருட்களின் சோர்ஸ்கோடும் (source code) மென்பொருட்களையும் எழுத்துருக்களையும் யார் வேண்டுமானாலும் மாற்றம் செய்யும் திறமூல உரிமையும் வழங்கப்பட்டிருந்தது.
ஒருங்குறி குழுமத்தில் புதிய யூனிகோடு எழுத்துரு உருவாக்குவது குறித்து பேசப்பட்டபோது பனாசியா எழுத்துருக்கள் பற்றி தெரிவித்தேன். கணிஞர் உமர்தம்பி அவர்கள் அவற்றை யூனிகோடாக மாற்றித்தருவதாக வாக்களித்தார். பிறகு சில நாட்கள் கழித்து பனாசியா எழுத்துரு ஒன்றை யூனிகோடு எழுத்துருவாக மாற்றம் செய்து சோதித்து பார்க்க அனுப்பியிருந்தார்.
ஆனால் அதன்பிறகு அவரைத்தொடர்பு கொள்ள இயலவில்லை. அவரது மரணச்செய்திதான் பிறகு அறிந்தது. அவர் கடைசியாக ஈடுபட்டிருந்த பணி இது. இதில் அவர் வேறு எழுத்துருக்களை செய்ததாக அறிய முடியவில்லை. ஆனால் அவர் கடைசியாக செய்த எழுத்துரு என்னிடம் இருக்கிறது. அதனை UmarUniTx என்ற பெயரில் வெளியிடுகிறேன்.
பின்வரும் சுட்டியில் எழுத்துருவை பதிவிறக்கம் செய்யலாம்.
http://akaravalai.blogspot.com/2006/08/blog-post_24.html

Tuesday, July 18, 2006

6) எழுதப் பழகுவோம் எச் ரி எம் எல்

பகுதி 6

தேர்வு செய்ய வேண்டியவற்றில் ஒன்றை மட்டும் தேர்வு செய்ய ரேடியோபொத்தான் உதவினாலும் பட்டியல் நீளமாக இருந்தால் அது பயன் தராது. எனவே"drop down" எனப்படும் 'தொங்கு பட்டியலை' பயன்படுத்த நேரிடும்.இதில் ஒரு முதன்மை பட்டியும் ஒரு உறுப்புப் பட்டியும் உண்டு. இந்த உள்ளிடு வகை கொடுக்கப் பட்ட பட்டியலிலிருந்து தேர்வு செய்யப் படும் வகை என்பதைக்குறிக்க சோடிகளுக்கிடையில் வருவது பட்டியலில் வரும் உர்ப்படிகளாகும். ஒவ்வொருஉருப்படிகளையும் குறிக்க

5) எழுதப் பழகுவோம் எச் ரி எம் எல்


பகுதி 5

நாம் இதுவரை கற்றுக் கொண்டது ஒரு அடிப்படையான இணையப்பக்கம் எழுதும்அளவுக்கு போதுமானது என்றாலும் இத்துறையின் ஒரு விளிம்பைத்தான்தொட்டிருக்கிறோம். இந்த மீயுரைகுறிமொழியின் வளர்ச்சி மேலொங்கிப்போய் பல கிளைகளாக வளர்ந்திருக்கிறது.இனி சில சிறிய விடயங்களைப் பார்ப்போம்:நீங்கள் பக்கங்களை எழுதும்போது சிறியகுறிப்புக்களையும்(comments) உங்கள் வசதிக்காக கூடவே எழுத விரும்பலாம்.ஆனால் அவை உலவியில் தெரியாமல் இருக்க வேண்டுமல்லவா? அதற்கு கீழ்க்கண்டவாறு குறிக்க வேண்டும்: என்று எழுதவேண்டும். இவற்றிற்கிடையே எது எழுதப் பட்டாலும் உலவிபுறக்கணித்துவிடும்.எழுத்துக்கள் இடமிருந்து வலமாகவோ அல்லது வலமிருந்து இடமாகவோஊர்ந்த்து செல்வதைப் பார்த்திருப்பீணர்கள். இதை IE பயனர் மட்டும் கண்டிருக்கமுடியும், காரணம் Netscape இந்த வசதியைத் தருவதில்லை.இதன் பண்புகள்:ALIGN= (LEFT, MIDDLE, BOTTOM)BEHAVIOUR=(SCROLL,SLIDE,ALTERNATE)BGCOLOR=(#000000 TO #FFFFFF)DIRECTION=(LEFT,RIGHT)HEIGHT=(PIXEL VALUE, %)VSAPACE=(NUMBER)LOOP=(NUMBER,INFINITE)SCROLLAMOUNT=(NUMBER)SCROLLDELAY(NUMBER)கீழ்க் கண்டதைhttp://www24.brinkster.com/umarthambi/html_try/view_result.htmlஎன்ற பக்கத்தில் ஒட்டி சோதித்துப் பாருங்கள்(IE பயனர் அதிட்டசாலிகள்!)
This Text is sliding to right once

This Text is scrolling

This Text is Alternating

This Text is scrolling slowly

Netscape பயனர்களும் ஒரு அதிட்டத்தைப் பெற்றிருந்தனர்(Ver 4.7 இல் இருந்தது. புதிய Ver6 இல் அது இல்லை). "சிமிட்டல்"தான் அது.IE இல் அது கிடையாது.இதை சோதித்துப் பாருங்கள்:I am Blinking!ஒரு கொசுரு: சில நேரங்களில் வேறு பக்கத்திற்குரியஇணைப்பை(link to other page) தட்டும்போது புதியசாளரத்தில்(window) அதைக் காண வேண்டிய தேவை ஏற்படலாம். அதற்குஇரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, அந்த இணைப்பின் வலச் சொடுக்குச்செய்து, கிடைக்கும் பட்டியலில் "open in new window" என்பத்தேர்ந்தெடுக்கலாம். இரண்டாவது அதைவிட எளிதானது. Shift ஐ அழுத்திக்கொண்டு அந்த இணைப்பின் மேல் சொடுக்கினால் புதிய சாளரத்தில் அந்தபக்கம் திறக்கும்.குறிப்பு:இந்த ஆக்கத்தில் கையாளப் படும் அறிவியல்/கணினி தமிழ்ச் சொற்களுக்குஆங்கிலப் பதம் வேண்டுவோர் கீழ்க் கண்ட தரவுத் தளத்தில் பெற்றுக்கொள்லலாம்:http://www24.brinkster.com/umarthambi/tamil/etamil_search.aspஇந்த மூன்றாவது பகுதியில் மேலும் மேம்பட்ட சில பட்டிகளையும் கட்டளைகளையும்பார்ப்போம். இவை உங்கள் பக்கத்தை மேலும் மெருகூட்ட உதவும்.பல வலைத்தளங்களை காணும்போது படங்களின் மீது சொடுக்கினால் வேறுபக்கங்களுக்கு அவை எடுத்துச் செல்வதைக் கண்டிருப்பீர்கள். இதை நாம் முன்பு வந்தபகுதியில் பார்த்திருக்கிரோம். மேலும் ஒரே படத்தின் வெவ்வேறுபகுதிகளில் சொடுக்கினால் வெவ்வேறு பக்கங்களுக்குச் செல்வதையும் சில வலைத்தளங்களில் அவதானித்திருப்பீர்கள். அது எப்படி முடிகிறது? இன்று அதைப்பார்ப்போம்.இந்த விளைவைப் பெறுவதற்கு நாம் முன்பே கண்ட பட்டியுடன் மேலும் சிலபுதிய பட்டிகளைக் கையாள வேண்டும். அவையாவன:முதலில் நாம் கையாளப் போகும் படத்திற்கு பட்டியில் ஒரு பெயர்தரவேண்டும். நீங்கள் விரும்பிய பெயரைத் தரலாம். எடுத்துக் காட்டாக அதுஇவ்வாறு இருக்கலாம்: .இனி, பட்டியில் usemap பண்பு மூலம் அதன் மீது இணைப்புஇடங்களை(area for hyper links) வரையறுக்கப் பயன்படுத்தப்போகிறோம் என்பதைக் குறிக்க, usemap="#camera" என்பதைத்தரவேண்டும் (கவனிக்க:# அடையாளம் தேவையான ஒன்று). பின்னர் என்பதில் நீங்கள் வரையறுக்கப் போகும் வடிவம் எத்தகையது என்றும் அவற்றின்coordinates (தமிழாக்கம் தேவை) எவை என்பதையும் குறிக்க வேண்டும்.஠எடுத்துக் காட்டாக ஒரு படத்தின் அளவு 270X200 படத்தனிமம் (pixel)என்றிருந்தால், அந்தப் பரப்பிலிருந்து எம்மாதிரியான வடிவத்தில் எந்தஇடத்திலிருந்து வரையறுக்கப் போகிறீர்கள் என்று குறிக்க வேண்டும். வடிவங்கள்மூன்று வகையாக குறிக்கப் படுகின்றன. செவ்வகம் (rect), வட்டம்(circle),பலகோணம்(polygon) ஆகியனவாகும்.எடுத்துக் காட்டாக, ஒரு செவ்வகம் என்றால் அதன் படத் தனிம இருப்பிடங்கள்நாம் பயன்படுத்தும் படத்தில் எங்கெங்கு அமைந்திருக்கின்றன என்று இப்படிகுறிக்க வேண்டும்:coords="112, 37, 158, 60"இதில் 112 என்பது அந்த வடிவம் (எடுத்துக் காட்டு: செவ்வகம்) படத்தின் இடப்புறத்திலிருந்து (x-axis) 112 வது தனிமப் புள்ளியில் தொடங்குகிறதுஎன்பதையும் 37 என்பது மேலிருந்து கீழ் (y-axis) புள்ளியில்தொடங்குகிறது என்பதையும், 158 என்பது இடப் புறத்திலிருந்து (x-axis)158 புள்ளியில் முடிகிறது என்பதையும், 60 என்பது மலிருந்து கீழ்(y-axis) 60 புள்ளியில் முடிகிறது என்பதையும். குறிக்கிறது. அதாவது,112, 37 என்பது, start x,y உம் 158, 60 என்பது end x,y உம்ஆகும்.மேலும், அந்த வடிவத்தில் சொடுக்கினால் எந்த இணையப் பக்கத்தைத் திறக்கவேண்டும் என்பதையும் குறிக்க வேண்டும். ஆக, பட்டியினுள் shape,coords, href என்ற மூன்று பண்புகளையும் தர வேண்டும். அது இப்படிஅமையும்:஠வட்ட வடிவமாக இருந்தால் அதன் நடுப் புள்ளியின் படத்தனிமஇடத்தையும் (x,y coordinates), ஆரத்தின் (radius) அளவையும்தரவேண்டும். அது இப்படி அமையும்: இதில் 206, 109 என்பது x, y ஆகவும் 44என்பது ஆரமாகவும் அமையும்.பல கோண வடிவமாக இருந்தால் இது இப்படி அமையும்:இதில் ஒவ்வொரு சோடிகளும்(87,25 / 114,106 / ....) கோணங்களின்முனைப் புள்ளிகளாக அமையும்.கீழே காணும் எடுத்துக் காட்டை ஒரு HTML கோப்பாக சேமித்தோ அல்லதுhttp://www24.brinkster.com/umarthambi/html_try/view_result.htmlஎன்ற தளத்தில் ஒட்டியோ அதன் விளைவைப் பாருங்கள். ஐயம் இருப்பின் அறியத்தாருங்கள்.஠

Camera Parts

Move your mouse on the picture. You will see "handpointer" where the corresponding pages are linked.

Flash pageLense pageGrip pageView finder pageஉள்ளிடு படிவம்(Form)இணையப் பக்கங்கள் எழுதுவதில் அறிந்திருக்க வேண்டியவைகளில் ஒன்று"படிவம்"(form) எழுதுதல். இணையத் தளங்களுச் செல்லும்போது உங்கள்மின்னஞ்சலையும் உங்களைப் பற்றிய சிறு குறிப்புக்களையும் உள்ளிடுமாறுஅமைந்திருக்கும் அனேக உள்ளீடு படிவங்களைப் பார்த்திருப்பீர்கள். இதன்பயன்பாடு தொழில் முறையில் அதிகம் என்றாலும் ஒரு சராசரி மீயுரைகுறிமொழி எழுதுபவருக்கு ஒரு சில நேரங்களில் மட்டும் பயன் தரும். இன்றுஅப்படியொரு படிவத்தைத் தயாரிப்பது எவ்வாறென்று காணலாம்.பயனர் பெயர், கடவுச் சொல் உள்ளிடும் சிறு படிவம் முதல் பயனர்களிடமிருந்துஉள்ளீடுகளைப் பெற்று அவற்றிற்கேற்ப தகவல்களைத் தர உதவும் சிக்கலான வகைவரை பல உண்டு. முதலில் எளிமையான ஒன்றிலிருந்து துவங்குவோம்.உள்ளிடும் படிவத் தொடக்கம் என்பதை குறியிட என்ற பட்டியைத்தரவேண்டும்.

இதில் ACTION, METHOD, TARGET என்ற பண்புகள்
குறிபிடத்தக்கவை. இந்த படிவத்தில் உள்ளீடு செய்வதற்கென கையாளப்படும்
பட்டியில் கீழ்க்கண்ட வெவ்வேறான பண்புகள் கொண்ட உறுப்புக்கள்
அமைந்துள்ளன இவைகளில் குறிப்பிடத்தக்கவை:

TEXT
PASSWORD
CHECKBOX
RADIO
SUBMIT
RESET
BUTTON

இவையன்றி, பட்டியலிடப் பட்டவையிலிருந்து தேர்வு செய்யும்படியான(drop
down list)அமைப்புக் கொண்ட

4)எழுதப் பழகுவோம் எச் ரி எம் எல்

பகுதி 4

இனி ஒரு மிகத் தேவையான ஒரு பட்டியைப் பார்ப்போம். பெரும்பாலும்அட்டவணை (Table) இல்லாத இணையப் பக்கங்களே இல்லை எனலாம்.தெரியும்படியோ அல்லது மறைமுகமாகவோ அது இருக்கலாம். எப்படி என்பதைஇதன் இறுதியில் தெரிந்து கொள்வீர்கள்.அட்டவணை எழுதும்போது சில நேரம் குழப்பம் நேருவது போலிருக்கலாம் சற்றுகவனித்தீர்களானால் எளிதாகச் செய்துவிடலாம்.
என்பவை இதன் தொடக்க, முடிவு பட்டிகளாக இருக்கும்.ஒரு அட்டவணை என்றால் என்னென்ன இருக்கும்? மேலிருந்து கீழாக வரிசை(row)இருக்கும். ஒவ்வொரு வரிசையிலும் குறுக்காக பல பத்திகள் (column)இருக்கும். (ஒரு excel worksheet ஐ நினைவு கூறுங்கள்). முதல்வரிசையில் இடமிருந்து வலமாக ஒவ்வொரு பத்திக்குமான தலைப்பு இருக்கும்.இதுதான் சாதாரணமாக எந்த அட்டவனையாக இருந்தாலும் நாம் காண்பது. இதைஎப்படி இந்த மொழியில் குறிப்பது?வரிசை என்பது TR (Table Row) என்பதாகவும் (excel இல் 1, 2, 3என்று மேலிருந்து கீழாக இருப்பதுபோல்), பத்தி என்பது TD (TableData) என்பதாகவும் (excel இல் A B C D என்று இடமிருந்து வலமாகஇருப்பதுபோல்) அமைந்திருக்கும்.முதலில் ஒரு வரியை எடுத்துக் கொண்டு, அதிலுள்ள பத்திகளை இடமிருந்துவலமாக எழுத வேண்டும். இவ்வாறாக ஒவ்வொரு வரியிலுள்ள பத்திகளையும்எழுதி முடிக்க வேண்டும்.ஒரு வரி கொண்ட ஒரு அட்டவணையைப் எளிதான பார்போம்.
Orange Apple Banana
மேற்கண்ட அட்டடவணை TABLE என்ற பட்டியோடு துவங்குகிறது. border="2"என்ற பண்பு 2 பட தனிமம் அளவிற்கு அதன் ஓரம் அமைந்திருக்க வேண்டும் என்றுகாட்டுகிறது. அதன் கீழே என்பது ஒரு வரியின்(row) துவக்கம் என்றுகாட்டுகிறது. அதன் கீழே இருக்கும் என்பது(Table Data )பத்தியின் தொடக்கப் பட்டியாக அமையும். Orange என்பது அந்த பத்தியில்எழுதப் படும் தரவு(data) ஆகும். தொடர்ந்து என்பது அந்த தரவுமுடிகிறது என்று காட்டுகிரது. இவ்வண்ணமே, Apple, Banana என்ற தரவுகளும்ஒவ்வொரு சோடிகளுக்கு இடையில் அமையும்.மேலுள்ள பட்டியலை உலவியில் பார்தீர்களானால் புரியும்.இது அட்டவணையின் துவக்கம்தான். மேலும் பலவற்றை தொடர்ந்து காணலாம். குறிப்பு:இந்த ஆக்கத்தில் வரும் எடுத்துக் காட்டுக்களை உடனடியாக சோதிக்க கீழ்க்கண்டவலைத் தலத்திற்குச் செல்லுங்கள்:http://www24.brinkster.com/umarthambi/html_try/view_result.htmlஇதில் எடுத்துக் காட்டுக்களை ஒட்டி உடனடடியாக விளைவை (result) காணமுடியும். மேலும், நீங்கள் விரும்பிய மாறுதல்களைச் செய்து சோதிக்கலாம்.ஒவ்வொரு தடவையும் கோப்பாகச் சேமிக்க வேண்டிய தேவையில்லை.அவ்வப்போது வரும் எடுத்துக் காட்டுக்களைச் சோதித்துக் காண வேண்டுகிறேன்.இது மேற்கொண்டு வரும் பகுதிகளை எளிதாக புரிந்து கொள்ள உதவும்நாம் ஒரு வரியை (row) எடுத்துக் கொண்டு (TR) அதில் எத்தனைபத்திகள் (column) வேண்டும் (TD) குறிப்பிட வேண்டும்.
One
மேற்கண்ட எடுத்துக் காட்டில் மொத்தம் எத்னை சதுரங்கள் வரும் என்றுஎண்ணுகிறீர்கள்? நீங்கள் எண்ணுவது சரிதான். ஒன்றே ஒன்றுதான்! அதாவது ஒருஅறை (cell) கொண்ட 'அட்டவணை'. காரணம் பட்டிகளுக்குஇடையே ஒரு சோடிதான் உள்ளது. One என்ற வரி, பட்டிகளுக்கு இடையில் இருப்பதால் அது அந்த அறையில்(cell)அமைந்திருக்கும். மேற்கண்டதை வெட்டி, ஒட்டி விளைவைப் பாருங்கள். மேலும் ஒரு பட்டியைச் சேர்த்து, அவற்றிற்கிடையில் எதாவது ஒரு சொல்லைஇட்டு சோதித்துப் பாருங்கள். (குறிப்பு: பட்டிகளுக்குஇடையில் ஏதாவது எழுத வேண்டும். இல்லையென்றால் இரண்டாவது அறை இருப்பதேதெரியாது.)இனி அட்டவணையிலுள்ள தரவுகளுக்கு (data) எவ்வாறு தலைப்பிடுவது என்றுபார்ப்போம். பொதுவாக அட்டவணையின் முதல் வரியே (முதல் ) தலைப்பாகஅமையும். இதில் பட்டிகளுக்கு பதிலாக பட்டிகளை இடவேண்டும். TH ஆனது Table Head என்பதைக் குறிக்கும். கீழேஉள்ள எடுத்துக் காட்டைப் பாருங்கள்:
This is Heading
This cell contains Data
தலைப்பானது, தடித்த (bold) எழுத்துருக்களுடன் அறைச் சதுரத்தில் மையப்படுத்தப் பட்டிருக்கும். தனியாக ,
பட்டிகளைக் கையாளத்தேவை இல்லை.கீழ்க் கண்டதை வெட்டிhttp://www24.brinkster.com/umarthambi/html_try/view_result.htmlஎன்ற தலத்திற்குச் சென்று ஒட்டி விளைவைப் பாருங்கள். தேவை இருந்தால்மாற்றம் செய்து சோதித்துப் பாருங்கள்.
Date Time Language
24-12-2001 8:00 English
25-12-2001 10:30 Tamil
அட்டவணையில் என்னென்ன பண்புகளைக் கையாளலாம் என்று பார்ப்போம்.அட்டவணை பண்புகள்:WIDTHALIGNBGCOLORBORDERCELLSPACINGCELLPADDINGWIDTH - அட்டவணை எவ்வளவு அகலத்தில் இருக்க வேண்டும் என்று குறிப்பது.இதை, சதவீதத்திலோ அல்லது படத்தனிம அளவிலோ குறிக்கலாம்ALIGN - (left, center, right) அட்டவணை படிவத்தில் எப்படி அமையவேண்டும் என்று குறிப்பது.BGCOLOR - அட்டவணையின் பின்னரங்க வண்ணத்தை மாற்ற.BORDER - அட்டவணையைச் சுற்றியிருக்கும் கோட்டின் தடிமன் எவ்வளவு இருக்கவேண்டும் என்று குறிப்பது.CELLSPACING - ஒவ்வொரு அறைக்கும் (cell) இடைவெளி எவ்வளவு இருக்கவேண்டும் என்று குறிப்பது.CELLPADDING - அறையில் (cell) எழுதப் படும் எழுத்துக்கள் (data)அறைச் சுவற்றிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் என்று குறிப்பது. இந்தப் பட்டியைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும்போது அட்டவணையைஏறத்தாழ எல்லா பக்கங்களிலும், தெரியும் படியோ அல்லது தெரியாதவாறோபயன் படுத்துகிறார்கள் என்று சொன்னேன். ஒரு பக்கத்தில் உள்ள படங்களை,எழுத்துக்களை, பத்திகளை ஒழுங்கில் வைக்க அட்டவணை பட்டியைப் பயன்படுத்துகிரார்கள். BORDER என்ற பண்பில் "0" என்று கொடுத்துவிட்டால்அட்டவணையைச் சுற்றி இருக்கும் கோடு மறைந்துவிடும். எனவே அது ஒரு அட்டவணைபோல் தெரியாது. Yahoo, Hotmail போன்ற ஏதாவது ஒரு பக்கத்தின்மூலக் குறியீடுகளை (HTML source) ஊன்றிப் பார்த்தீர்களானால் தெரியும்.கீழ் உள்ளதை வெட்டி,http://www24.brinkster.com/umarthambi/html_try/view_result.htmlஇதில் ஒட்டி விளைவைப் பாருங்கள்.
To further enable you to locatethe problem, you may start the Java console (under MSIE or NS). If you'reusing Netscape, you'll find it under the Communicator item in the Netscapemenu (Java Console). Using MSIE, you'll find it under View (Java Console) inthe MSIE menu. The Java Console will give you more details than the statusbar, and may help you find out why the applet will not run. Often, itwill show you that the applet depends on more than one class file, andyou'll need to upload that class file to your server as well.

The applet may be written for a newer JDK thanyou have on your system. Most applets will work with MSIE4, and Netscape4as well, provided you have applied the latest JDK 1.1 patch from

An Example ofusing table to align contents of a page

  1. First, select the Java applet you would liketo add to your site. Many of the applets are free with some requiring onlya link back to the author's site. Others have a link to theauthor's site written in them which can be removed by paying a registrationfee. Still others require a fee before they can be used.

  2. Download the zip file to a directory on yourcomputer (make sure you remember the directory where you downloaded it).The zip file contains the necessary files to run the Java applet.

    In a few cases, you must download the jar orclass files individually. Note that in Netscape Communicator, you musthold down the shift key and then click the link to download the files.



ஒவ்வொரு அறையிலுள்ள தரவுகளை தனித்தனியாக இடப் பக்கமோ,வலப்பக்கமோ அல்லது நடுவிலோ ஒழுங்கு (ALIGN) படுத்தலாம். left,right, center, justify முதலான பண்புகளை பயன்படுத்தலாம். மேல்கீழாக(VALIGN)baseline, bottom, middle, top முதலான பண்புகளை பயன்படுத்தலாம்.மேலும் சில நேரம் ஒரே தலைப்பின் கீழ் இரண்டு மூன்று தரவுகள் வரலாம்.எடுத்துக் காட்டாக, Time என்ற தலைபின் கீழ் AM PM என்ற இரு தரவுகளைஇட நேரிடலாம். இதற்காக இரண்டு அறைகளை ஒன்றாக்க வேண்டும். (Excelஇல் cell merging செய்வது போல்) இடமிருந்து வலமாகவோ அல்லதுமேலிருந்து கீழோ அறைகளை இணைக்கலாம். இதைச் செய்வதற்கு COLSPAN,ROWSPAN ஆகிய பண்புகளை பயன்படுத்த வேண்டும்.கீழுள்ள எடுத்துக் காட்டைhttp://www24.brinkster.com/umarthambi/html_try/view_result.htmlபக்கத்தில் ஒட்டி எப்படி தோன்ருகிறது என்று பாருங்கள்.
Time Table
Tution Timings AM PM
8:00 4:30
11:00 7:00
10:00 5:30
10:00 8:30
மேற்கண்ட எடுத்துக்காட்டில் "Time Table" என்ற தலைப்புக்காக 3 அறைகளைஇடமிருந்து வலமாக சேர்த்திருக்கிறோம். அதை COLSPAN="3" என்பதாககுறித்திருக்கிறோம். "Tution Timings" என்ற பகுதிக்காக 5 அறைகளைமேலிருந்து கீழாக சேர்த்திருக்கிறோம்.ஒவ்வொரு அறையிலும் பின்னரங்கு வண்ணத்தைச் சேர்பதற்கு நாம் முன்பே பார்ததுபோல் BGCOLOR என்ற பண்பை பயன்படுத்த வேண்டும்.இவையன்றி அட்டவணைகும் தலைப்புத் தரலாம். இதற்கு என்றபட்டியைப் பயன்படுத்த வேண்டும். ALIGN என்ற பண்பில் left, right,top, bottom என தேவையான இடத்தில் தலைப்பைப் பெறலாம். இந்தப்பட்டியை அட்டவணை பட்டி ( ) யினுள் எந்த இடத்திலும் பயன் படுத்தலாம்என்றாலும்
பட்டிகு அடுத்து பயன் படுத்தினால் குழப்பம் இருக்காது.மேலுள்ள அட்டவணையில் இந்தப் பட்டி சேர்க்கப் படவில்லை. நீங்களாகவேகீழுள்ள வரியைச் சேர்த்துhttp://www24.brinkster.com/umarthambi/html_try/view_result.htmlவலைப் பக்கத்தில் ஒட்டி சோதியுங்கள். இனி சில விசேட எழுத்துருக்களைப் பார்ப்போம்.நாம் இந்தத் தொடரின் தொடக்கத்தில் மீயுரைகுறிமொழியின் பண்புகள்பற்றிப் பேசும்போது சில விடயங்களைப் பற்றிப் பேசினோம். அதில் ஒன்று,இடைவெளி பற்றியது. இரு சொற்களுக் கிடையில் எத்தனைஇடைவெளி(spaces) தந்தாலும் அது ஒன்றாகவே கணக்கில் கொள்ளபடும்.கீழ்க் கண்டதைhttp://www24.brinkster.com/umarthambi/html_try/view_result.htmlபக்கத்தில் ஒட்டி எப்படித் தோன்றுகிறது என்று பாருங்கள்.I have enough 'spaces' but no room for them in the browser!ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு இடைவெளியைத் தவிர மற்றவையெல்லம் மறைந்துபோயிருக்கும். அப்படியானால், கூடுதல் இடைவெளியை எப்படிப் பெறுவது?அதையும் குறியீடு மூலம்தான் பெற வேண்டும். அதைக் குறிக்க என்றுஇடவேண்டும். அவைகளை 'non breaking space" என்கிறோம். அதாவதுவரியை முறிக்காமல் இடைவெளி பெறுவது. இந்த குறியீட்டில் முதலில் வரும்"&" உம் இறுதியில் வரும் ";" (அரைப் புள்ளி) தேவையான ஒன்றாகும்.கீழ்க் கண்டதை மீண்டும் சோதித்துப் பாருங்கள்.I have enough butno roomfor them inthe browser!மேற்கண்டதில் என்பதை தேவையான இடைவெளிகளைப் பெறுவதற்காகபயன் படுத்தியிருக்கிறோம்.அதேபோல் < > களுக்கு இடையில் எழுதப் படும் எழுத்துக்கள் உலவியில்தோன்றாது. அப்படியொரு நிலை ஏற்பட்டால் < (lt - lesser than)> (greater than) என்பவைகளை பயன்படுத்த வேண்டும். கீழ்க்கண்டவைகளை சோதித்துப் பாருங்கள்:< This is visible >இவ்வாறே, "Copy Right" சின்னத்தைப் பெறுவதற்கு &Copy; என்பதையும்,"Ampersand" எழுத்துருவைப் பெற & என்பதையும்,"Registration" சின்னத்தைப் பெற ® என்பதையும் இடவேண்டும்.குறிப்பு: "Registration" சின்னத்தின் எழுத்துரு எண்(174) தமிழ் "ஈ"க்காகப் பாவிக்கப் பட்டிருப்பதால் தமிழில் எழுதும்போது "ஈ" தான் கிட்டும்.அதைப் போலவே, ™ (trade mark) எழுத்துருவுக்கு(153) "ஙு"கிட்டும்.

3)எழுதப் பழகுவோம் எச் ரி எம் எல்...!

2)எழுதப் பழகுவோம் எச் ரி எம் எல்...தொடர்ச்சி.....
 
இவைகளுக்கு இடையில் எம்மாதிரி எழுதப் படுகின்றனவோ, உலவியிலும் அம்மாதரியே தோன்றும். கீழே காணும் பகுதியை வெட்டி ஒரு உரை தொகுப்பியில் (text editor) pre.html என்ற பெயரில்(அல்லது ஏதேனும் ஒரு பெயரில்) சேமித்து உலவியில் சோதிதுப் பாருங்கள்:

இந்த பகுதி பட்டி இடப்படாத பகுதி

கண்ணிருந்தும் கல்லாதார் வாழ்க்கை என்றும்காரிருளில் நடக்கின்ற செயெலே யாகும்மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போலமாந்தருக்குள் ஒளிந்திருக்கும் திறனைக் காணநுண்ணறிவை வெளிப்படுத்தும் கல்வி தேவைநுரைக்குமிழி போலதுவும் பொங்கு தற்கும்எண்ணத்தை எடுத்தியம்பும் ஆற்ற லுக்கும்எழுத்தறிவே ஒளிவிளக்காய் மிளிர்ந்து நிற்கும்.-கவிக் கொண்டல் மா. செங்குட்டுவன்

இந்த பகுதி பட்டி இடப்பட்ட பகுதி



கண்ணிருந்தும் கல்லாதார் வாழ்க்கை என்றும்காரிருளில் நடக்கின்ற செயெலே யாகும்
மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போலமாந்தருக்குள் ஒளிந்திருக்கும் திறனைக் காணநுண்ணறிவை வெளிப்படுத்தும் கல்வி தேவைநுரைக்குமிழி போலதுவும் பொங்கு தற்கும்எண்ணத்தை எடுத்தியம்பும் ஆற்ற லுக்கும்எழுத்தறிவே ஒளிவிளக்காய் மிளிர்ந்து நிற்கும்.

-கவிக் கொண்டல் மா. செங்குட்டுவன்





############################################



பகுதி 3

இந்த மூன்றாவது பகுதியில் நாம் காணப் போவது, ஒரு வலைப் பக்கத்திற்கெனநீங்கள் படிவம் எழுதப் போவதாக இருந்தால்
குறைந்த அளவு அறிந்திருக்கவேண்டிய விடயங்களைப் பற்றிது.
ஒரு வலைப் பக்கம் என்பது, நாம் இதுவரை கண்ட படிவத்திற்கு மேம்பட்டது.எதாவதொரு வலைப்பக்கத்தின் மூலத்தை (source) பார்த்தீர்களானால்ஏராளமான பட்டிகளைப் காணலாம். அவற்றில்
பல, வலைப் பக்கத்திற்குநேரடியான தொடர்புள்ளவையும்
(நாம் முன்பு கண்டதுபோல்) சில நேரடியானதொடர்பு
இல்லாதவையுமாக இருக்கும்.

அப்படிப்பட்ட பட்டிகளைப்யைப் பற்றிபார்க்கப் போகிறோம்.
எந்த ஒரு வலைப் பக்கத்தை எடுத்தாலும் பட்டிக்கும் பட்டிக்கும்
இடையே பட்டியைக் காணலாம். இந்த பட்டிகளுக்கிடையில்
சில தேவையான தகவல்கள் சில விசேட பட்டிகளில்
தரப்படுகின்றன. இவற்றுள் வெகு சாதாரணமாகக் காணக்
கூடியது அதை அன்றி, , ,





When it is auto refreshed, a random number isgenerated.
இனி இணையப் பக்கங்களில் சாதாரணமாகக் காணப்படும்
பட்டிகள் சிலவற்றைப்பார்ப்போம்.சுட்டிகள், இணையப்
பக்கங்களில் வெகுவாகக் காணப்படும் ஒன்றாகும்.நாம்
இவைகளைப் பற்றி முந்தய பகுதியொன்றில் கண்டிருக்கிறோம். இந்தசுட்டிகளை ஏதுவாக்கித் தருவது என்ற (Anchor) பட்டியாகும்.

இந்தபட்டியில் காணப்படும் ஒரு பண்பு(Attribute), இதற்கு துணை செய்கிறது.HREF (Hyper link reference) எனப்படும் இந்தப் பண்பிற்கு நாம் எந்தஇணையத் தலத்திற்குச் செல்ல வேண்டுமோ அதன் இணைப்பு முகவரியைக்கொடுத்துவிட்டால் போதும். மேலும் அந்த முகவரியைப்
பற்றிய இலகுவானசொற்றொடர்களையும் அமைத்துக் கொள்ளலாம்.உதாரணமாக,
'>http://www.blogger.com/">
ஒரு அமெரிக்க செய்திநிறுவனம் இதில் A என்பது பட்டி.
அதை அடுத்து வரும் "http://www.cnn.com/" ஐ,
இந்த பட்டியின் HREF பண்பாகக் கொடுத்திருக்கிறோம்.
அந்த பட்டியின்பின், ஒரு வசதியான ஒரு சொற்றொடரை கொடுத்துக் கொள்ளாம். (இங்கு 'ஒரு அமெரிக்க செய்தி நிறுவனம்' என்று தந்திருக்கிறோம்.)மின்னஞ்சல் முகவரியை உங்கள் இணையப் பக்கத்தில் இணைப்புச் சுட்டியாகத்தரலாம்.அது கீழ்க் கண்டவாறு அமையும்.http://www.blogger.com/ மின்னஞ்சல்இங்கும் உங்களுக்கு வசதியானதொரு சொற்றொடரை தரலாம்.கணினியில் உள்ள
ஒரு கோப்பை(file) சுட்டவும் கீழ்க்கண்டவாறுபயன்படுத்தலாம்:
test>(கவனிக்க'>file:///c:/windows/desktop/XSL_umar.html">test>(கவனிக்க:

" file: " அடுத்து மூன்று சாய்கோடுகள்(///) இருக்கின்றன) இந்த
HREF பண்பை அன்றி வேறு சில பண்புகளும் இந்த பட்டியில்
இருக்கின்றன. அவைகளை தேவையான தருணத்தில் பார்க்கலாம்.
இன்றும் வெகுவாகக் காணக் கூடிய பட்டியொன்றைப் பற்றி காணப்போகிறோம்.பக்கங்களுக்கு அழகூட்டுவது மற்றுமன்றி
விளக்கப் கட்டுரைகள், விளம்பரங்கள்ஆகியவைகளைக் கொண்ட
பக்கங்களில் படங்களை சேர்ப்பது தேவையானஒன்றாகும்.
இதற்கு என்ற (Image) பட்டியை உபயோகிக்கிறோம்.
இந்த என்ற பட்டியானது,SRC, WIDTH, HEIGHT, BORDER, ALIGN, HSPACE, VSPACE, ALTமுதாலான பண்புகளைக்(properties) கொண்டது. இதில் SRC என்ற பண்புதேவையான(mandatory) ஒரு பண்பாகும்.

இந்த பண்புதான் படத்தின்இருப்பிடத்தைக்(source) குறிப்பதாகும். குறைந்த அளவு, இந்தப் பண்பாவது பட்டியில் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். நீங்கள் உபயோகப் படுத்தப் படும் படம் C:/winter.jpg வாக இருந்தால்இப்படிக் குறிக்க வேண்டும்:file:///f:/winter.jpg">படத்தின் இருப்பிடம் உங்கள் கணினியாகவோ அல்லது ணையத் தலமாகவோஇருக்கலாம். இனியொரு சோதனை செய்து பார்க்கலாம். உங்கள் கணினியில்உள்ள ஏதாவது ஒரு gif அல்லது jpg படத்தை தேர்ந்தெடுத்து அதன்இருப்பிடத்தை குறித்துக் கொள்ளுங்கள். இப்போது கீழ்க் காணுவதுபோல் ஒருஉரை தொகுப்பியில்(text editor - eg: Note pad) தட்டச்சுசெய்யுங்கள்:

I like thisPicture

file:///f:/tamil-asp/stage.gif">குறிப்பு: மேற்கண்டதில் "file:///f:/tamil-asp/stage.gif"என்பதை உங்கள் படத்தின் இருப்பிடத்திற்கு தக்கவாறு மாற்றிக் கொள்ளுங்கள். இதில் கோப்பின் இருப்பிடமான f:/tamil-asp/stage.gif என்பதற்குமுன் file:/// என்பதைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்(காரணத்தை சென்றமுறைவிளக்கியிருக்கிறோம்). stage.gif என்ற கோப்பு உங்கள் வலைப்பக்கத்தின் அதே directory இல் இருந்தால் IMG SRC="stage.gif"என்று கோப்பின் பெயரை மட்டும் தந்தால் போதுமானது. இவ்வாறே அந்தப் படம்வேறு ஒரு வலைப் பக்கத்தில் இருந்தாலும் குறிக்கலாம்.கீழே காணும் பட்டியலை yahoomail.html என்ற பெயரில் சேமித்து உங்கள்உலவியில் சோதித்துப் பாருங்கள். Yahoo Mail இன் படத்தை அதன் வலைப்பக்கத்திலிருந்தே உபயோகித்துக் கொள்கிறோம். இவ்வாறு தேவைப் பட்டால்வெவ்வேறு இணையத்தலங்களிலிருந்து படங்களை உபயோகித்துக் கொள்ளலாம்.குறிப்பு: இதை சோதிக்கும்போது இணையத் தொடர்பு (internetconnection) இருக்கவேண்டும்

Yahoo Maillogo

http://us.i1.yimg.com/us.yimg.com/i/us/pim/mail3.gif"> WIDTH, HEIGHT என்ற பண்புகளைக் கொண்டு படத்தின் அகல உயரங்களைமாற்றிக் கொள்ளல்லாம். அளவுகள் படத்தின் தனிமப் புள்ளிகளில் (pixel).உம்: WIDTH="100" , HEIGHT="75"இனி BORDER என்ற பண்பையும் சேர்த்து அது எவ்வாறு உலவியில்தோற்றமளிக்கிறது என்று பார்க்கலாம். மேற்கண்ட உதாரணத்தில் மாறுதல்செய்யுங்கள்:http://us.i1.yimg.com/us.yimg.com/i/us/pim/mail3.gif">என்ற வரியில் BORDER="2" என்பதைச் சேருங்கள். அது இவ்வாறு அமையும்:உங்கள் படத்தைச் சுற்றி கோடு இடப் பட்டிருக்கும். இது எத்தனை படத்தனிமங்களால் (picture element - pixel) ஆனது என்று குறிக்க வேண்டும்இங்கு 2 என்பது இரண்டு புள்ளிகள் தடிமன் என்று பொருள்.ALT என்கிற பண்பு மூலம் படத்திற்கு ஒரு மாற்றாக (alternate) சிறுகுறிப்புத் தரலாம். படத்தின்மேல் 'எலி' நகரும்போதும், ஏதோ ஒருகாரணத்தால் திரையில் படம் தெரியாத போதும் இந்த குறிப்பு தோன்றும்.ALIGN என்பது படத்தை அதைச் சுற்றி இருக்கும் எழுத்துக்களுக்கோ (அல்லதுபடத்திற்கோ) எப்படி அமையவேண்டும் என்பதைக் குறிக்கும்.ALIGN="bottom"ALIGN="middle"ALIGN="left"ALIGN="right"ALIGN="top"ஆகியவைகளை இதில் குறிக்கலாம். HSPACE, VSPACE என்பவை இந்தப் படத்திற்கு பக்கவாட்டிலோ அல்லதுமேலும் கீழுமோ எவ்வளவு இடைவெளி இருக்கவேண்டும் என்று குறிக்கலாம். அளவுபட தனிமத்தில் (pixel).நீங்கள் தட்டச்சு செய்தவைகளை mypic.html என்ற பெயரில் சேமித்துஉலவியில் சோதித்துப் பாருங்கள்.பல நேரங்களில் ஒரு படத்தில் சொடுக்குவதன் மூலம் வேறு பக்கத்திற்கோஅல்லது பக்கத்தின் வேறு பகுதிக்கோ செல்ல முடிவதைப் பார்த்திருப்பீர்கள்.இன்று, அது எப்படி என்பதைப் பார்ப்போம்.படத்தைப் பெறுவதில் இதுவரைகண்ட எல்லா பண்புகளையும் இதில் உபயோகித்தும்,அந்தப் படத்தை சுட்டாகவும் (link) ஆகவும் பயன்படுத்தி ஒரு படிவத்தைப்பார்ப்போம். முதலில் இந்த பகுதியை வழக்கம்போல் ஒரு உரை தொகுப்பியில்வெட்டி, ஒட்டி mylink.html என்ற பெயரில் சேமித்துக் கொண்டு, உலவில்பாருங்கள். கீழ்க் காணும் பண்புகள் உபயோகப் படுத்தப் பட்டிருகின்றன.அவைகளை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள் என்பதை சோதிக்கலாம்.WIDTH="80"HEIGHT="80"BORDER="5"ALIGN="left"HSPACE="20"VSPACE="5"ALT="Science Tamil Search">முதலில் இணைய இணைப்பு (internet connection) ஏதுமில்லாமல்சோதித்துப் பாருங்கள். அப்போது படம் கிடைக்காது. காரணம் அந்தப் படம்ஒரு இணையப் பக்கத்தில் இருக்கிறது. ஆனால் அது இருக்க வேண்டிய இடத்தில்Science Tamil Search என்ற வாசகம் இருக்கும். இதுதான் ALT(alternate) என்ற பண்பில் நாம் குறிப்பிட்டிருப்பதாகும். பின்னர் இணையஇணைப்புடன் அந்த படத்தில் சொடுக்கிப் பாருங்கள் இந்தப் படத்தோடுஇணைக்கப்பட்டிருக்கும் வலைப் பக்கத்திற்குத் தாவிச் செல்லலாம். இந்தப்படத்தின் உண்மையான அளவு 36X36 pixel ஆகும். இங்கு நாம் 80X80அளவுக்குப் பெரிதாக்கி இருக்கிறோம். இவ்வாறே பெரிய படங்களையும்இடத்திற்குத் தக்கவாறு குறுக்கிக் கொள்லலாம்.

Testing hyperlink

SRC'>http://www24.brinkster.com/umarthambi/tamil/etamil_search.htm">SRC=
"http://www.geocities.com/csd_one/HomeP23.jpg"WIDTH="80" HEIGHT="80" BORDER="5" ALIGN="left"HSPACE="20" VSPACE="5" ALT="Science TamilSearch">The HTML comments in this page contain theconfiguration in formation that allows users to editpages in your web using the Microsoft Web PublishingWizard or programs which use the Microsoft WebPublishing Wizard such as FrontPad using the sameusername and password they would use if they wereauthoring with Microsoft FrontPage. Please refer tothe Microsoft's Internet SDK for more information onthe Web Publishing Wizard APIs.பண்புகளை மாற்றி சோதனை செய்து பாருங்கள்.

2)எழுதப் பழகுவோம் எச் ரி எம் எல்...!

பகுதி 2


இதுவரை கண்ட பட்டிகள் அனைத்தையும் கையாண்டு ஒரு முழுமையான படிவத்தைக் காணும் முன் மேலும் ஒரு உபயோகமான பட்டியைப் பார்ப்போம்.சில நேரங்களில் படிவத்தின் குறுக்கே கிடைக் கோடு இட வேண்டிய தேவை ஏற்படலாம். அதற்கு

அதாவது (H)orizontal (R)ule என்ற பட்டியை உபயோகப் படுத்தவேண்டும். இந்த

பட்டியை உபயோகித்தால் திரையின் இரு புறத்திலும் தொடும்படியாக ஒரு கிடைக் கோடு அமையும். தேவையானால் இதன் அகலத்தை இப்படி குறைத்துக் கொள்ளலாம்:வழி 1: முழு கோட்டின் அகலத்தில் இத்தனை சதவீதம் என்று சொல்லுதல்

வழி 2: நமக்கு வேண்டிய கோடு, எத்தனை புள்ளிகளால்(pixel) ஆனதாக இருக்க வேண்டும் என்று சொல்லுதல். மேல் உள்ளதைப் போலவே, % குறி இல்லாமல் எழுத வேண்டும்

இதுவரை நாம் கற்றுக் கொண்ட பட்டிகள்:

,

....




    • இவைகைளைக் கொண்டு உருவாக்கிய மாதிரி படிவத்தைக் கீழே தந்திருக்கிறேன். வெட்டி, ஒட்டி உலவியில் பாருங்கள் இம்மாதிரி ஒரு முழுமையான படிவத்தை எழுதிப் பாருங்கள்.இது மிக, மிக அடிப்படையான ஒரு படிவம். இன்னும் நிரம்ப இருக்கிறது.

      நான் படித்த புத்தகங்கள்

      சென்ற வாரம் சில புத்தகங்கள் வாங்கி வந்தேன். ஓய்வு கிட்டிய நேரங்களில் ஒவ்வொன்றாய் படித்தேன் எல்லாம் பயனுள்ள புத்தகங்கள். கீழ் காணுபவைதான் நான் வாங்கிவந்த புத்தகங்கள்:

      1. ஒற்றுமை
      2. கணினி கற்றுக் கொள்ளுங்கள்
      3. நோயற்ற வாழ்வு
      4. புகை, மனிதனுக்குப் பகை
      அந்தப் புத்தகங்களிலிருந்து ஒரு சில வரிகளை இங்கே காண்போம்.
      • ஒற்றுமை
      ஒற்றுமை என்பது இன்றைய உலகத்தில் அருகி வரும் ஒன்றாகிவிட்டது. ஒரே நோக்கத்திற்காகச் செயல்படும் இயக்கங்கள் அல்லது தனி மனிதர்கள் கூட தம்மிடையே ஒற்றுமை காண மறுக்கின்றனர். இதன் பிரதான காரணம் தன்னை முன்னிறுத்த வேண்டும் என்ற எண்ணமே.
      • கணினி கற்றுக் கொள்ளுங்கள்
      இன்றைய கால கட்டத்தில் கணினிக் கல்வி என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அதிலும் தாய் மொழியில் கற்பிப்பதென்பது தேவை என்று ஆகிவிட்டது. ஒரு படைப்பாளன் என்ற முறையில் தான் சிரமப் பட்டு வடித்த தன் கருத்துக்கள் சிதையாமல் அனைவருக்கும் புரியும் வண்ணமும், அதே நேரத்தில் புது தமிழ்ச் சொற்களை படிப்பவர் மனதில் பதியுமாறு செய்வதும் அவனுடைய கடமையாகிறது. 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது பழமொழி.
      அந்த செல்வத்தை சிலர் இயற்கையிலேயே இழந்திருந்தாலும் இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் அவைகளை திரும்பப் பெறுவதென்பது சாத்தியமான ஒன்றாகி வருகிறது. இன்று நிறமிகளைப் பற்றிய ஆய்வு அதன் உச்சத்தையே எட்டியிருக்கிறது.
      • புகை, மனிதனுக்குப் பகை
      புகைப்பதால் உண்டாகும் தீமைகளை புகைப்பவர்களே அறிந்திருந்தும் அவர்கள் சிந்திப்பதில்லை. 'என் உடல் கெட்டால் உனக்கென்னெ?' என்பது அவர்கள் எண்ணம். அவர் உடம்பு, அவர் நினைத்துக் கொள்ளட்டும். ஆனால் நான் நான் சுவாசிக்கும்படியாக அவர் ஊதித் தள்ளுவது எந்த விதத்தில் நியாயம்?
      குறிப்பு:
      மேற்கண்ண்டவை அனைத்தும் கற்பனையே.
      இந்த ஆக்கத்திற்கான மாதிரியாக எழுதப் பட்டது.
      -உமர்
      இந்த மொழியின் சிறப்பு அம்சம் என்ன என்றால் ஓரிடத்திலிருந்து படிவத்தின் வேறு பகுதிக்கோ அல்லது வேறு பக்கத்திற்கோ தாவ வகை செய்வது. இதை hyper linlk என்கிறோம். போக வேண்டிய இலக்கை, சுட்டி நிற்கும் சொற்களுடனோ அல்லது படத்துடனோஒட்ட வைக்கும் பட்டிதான் என்பது. இந்த பட்டியின் உள்ளே எந்த மாதிரியான தொடர்பு, எந்த இலக்கு என்று குறிக்க வேண்டும். இங்கு, இந்த பட்டியை உபயோகித்து எவ்வாறு படிவத்தின் வேறுபட்ட பகுதிகளுக்குத் தாவாலாம் என்று காண்போம்.ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்குத் தாவ வேண்டுமானால் இரண்டு விடயங்களைத் தீர்மானம் செய்ய வேண்டும். ஒன்று சுட்டி; இரண்டாவது சுட்டப்படும் இடம். முதலில் சுட்டப்படும் இடத்தை குறியீடு செய்ய வேண்டும். அதாவது அந்த இடத்திற்கு ஒரு பெயர் தர வேண்டும். நாம் முன்பு கண்ட படிவத்தில் நான்கு புத்தகத் தலைப்புக்களைத் தந்து, அவற்றிலிருந்து சில வரிகளையும் கண்டோ ம். நீங்கள் நேராக "கணினி கற்றுக் கொள்ளுங்கள்" பகுதிக்குத் தாவ வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அந்தப் பகுதிக்கு ஒரு பெயர் தர வேண்டும். அந்தப் பெயர் எதுவாகவும் இருக்கலாம். உதாரணமாக, "கணினி" என்று பெயரிட வேண்டுமானால் அந்தப் பகுதியின் தொடக்கத்தில் கீழ்க் கண்டவாறு பட்டியை இணைக்க வேண்டும்.பின்னர், சுட்டியைக் குறிக்க வேண்டும். நாம் நான்கு புத்தகங்களையும் வரிசைப் படுத்தி பட்டியலிட்டோ மல்லவா? அவைகளை சுட்டியாக மாற்றிக் கொள்ளலாம். "கணினி கற்றுக் கொள்ளுங்கள்" என்பதற்கு முன்னால் என்று குறிக்க வேண்டும்இப்படிச் செய்வதன் மூலம் "கணினி" என்ற பெயரிடப்பட்ட இடத்திற்குத் தாவ வேண்டும் குறிக்கிறோம். அது இப்படி இருக்கும்:கணினி கற்றுக் கொள்ளுங்கள்(# என்ற குறியை "கணினி" க்கு முன்னால் இடுவது அவசியம்)இந்தப் பட்டிகள் இணைக்கப்பட்ட படிவம் கீழே தந்திருக்கிறேன். ஒரு முறை சறு நோட்டமிட்டுவிட்டு, ஏதாவது ஒரு பெயரில்(உதா: myhtml.html) சேமித்து உலவியில் சோதித்துப் பாருங்கள்.

      நான் படித்த புத்தகங்கள்

      சென்ற வாரம் சில புத்தகங்கள் வாங்கி வந்தேன். ஓய்வு கிட்டிய நேரங்களில் ஒவ்வொன்றாய் படித்தேன் எல்லாம் பயனுள்ள புத்தகங்கள். கீழ் காணுபவைதான் நான் வாங்கிவந்த புத்தகங்கள்:

      1. ஒற்றுமை
      2. கணினி கற்றுக் கொள்ளுங்கள்
      3. நோயற்ற வாழ்வு
      4. புகை, மனிதனுக்குப் பகை
      அந்தப் புத்தகங்களிலிருந்து ஒரு சில வரிகளை இங்கே காண்போம்.
      • ஒற்றுமை
      ஒற்றுமை என்பது இன்றைய உலகத்தில் அருகி வரும் ஒன்றாகிவிட்டது. ஒரே நோக்கத்திற்காகச் செயல்படும் இயக்கங்கள் அல்லது தனி மனிதர்கள் கூட தம்மிடையே ஒற்றுமை காண மறுக்கின்றனர். இதன் பிரதான காரணம் தன்னை முன்னிறுத்த வேண்டும் என்ற எண்ணமே.
      • கணினி கற்றுக் கொள்ளுங்கள்
      இன்றைய கால கட்டத்தில் கணினிக் கல்வி என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அதிலும் தாய் மொழியில் கற்பிப்பதென்பது தேவை என்று ஆகிவிட்டது. ஒரு படைப்பாளன் என்ற முறையில் தான் சிரமப் பட்டு வடித்த தன் கருத்துக்கள் சிதையாமல் அனைவருக்கும் புரியும் வண்ணமும், அதே நேரத்தில் புது தமிழ்ச் சொற்களை படிப்பவர் மனதில் பதியுமாறு செய்வதும் அவனுடைய கடமையாகிறது. 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது பழமொழி.
      அந்த செல்வத்தை சிலர் இயற்கையிலேயே இழந்திருந்தாலும் இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் அவைகளை திரும்பப் பெறுவதென்பது சாத்தியமான ஒன்றாகி வருகிறது. இன்று நிறமிகளைப் பற்றிய ஆய்வு அதன் உச்சத்தையே எட்டியிருக்கிறது.
      • புகை, மனிதனுக்குப் பகை
      புகைப்பதால் உண்டாகும் தீமைகளை புகைப்பவர்களே அறிந்திருந்தும் அவர்கள் சிந்திப்பதில்லை. 'என் உடல் கெட்டால் உனக்கென்னெ?' என்பது அவர்கள் எண்ணம். அவர் உடம்பு, அவர் நினைத்துக் கொள்ளட்டும். ஆனால் நான் நான் சுவாசிக்கும்படியாக அவர் ஊதித் தள்ளுவது எந்த விதத்தில் நியாயம்?
      குறிப்பு:
      மேற்கண்ண்டவை அனைத்தும் கற்பனையே.
      இந்த ஆக்கத்திற்கான மாதிரியாக எழுதப் பட்டது.

      -உமர்



      மேற்கொண்டு, படிவத்தை அலங்காரப் படுத்துவதைப் பற்றி இனி பார்ப்போம்.அதற்கு முன் வண்ணங்களைப் பயன்படுத்துவது பற்றி அறிந்து கொள்வோம். நாம் கண்ட மாதிரிப் படிவத்தில், வண்ணங்களைப் பெறுவதற்காக "red", "blue" என்று சொற்களைப் பயன்படுத்தினோம். குறிப்பிட்ட வண்ணங்களுக்கு மட்டுமே சொற்களைப் பயன்படுத்தமுடியும். படிவங்களில் பயன்படுத்த இவை போதும் என்றாலும், தொழில் முறையில் இணையப் பக்கங்களை இயற்றும்போது வேறு முறையைக் கையாளுகிறோம். இம்முறை மூலம் விரும்பிய வண்ணக் கலவைகலைப் பெற முடியும். சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவற்றின் வேறுபட்ட அளவுகளை 'பதினாறு எண்ணிய' முறையில்(hexadecimal: hexa-ஆறு, decimal-பத்து) குறிக்க வேண்டும். இந்த 'பதினாறு எண்ணிய'முறை என்றால் என்ன? நாம் சாதாரணமாக எண்ணும்போது 0 இல் தொடங்கி 9 வரை பத்து கொண்ட தொகுதியாக எண்ணுவோம். 'பதினாறு' வகை எண்ணிக்கையில் பத்துக்கு மேல் எப்படிப் பெறுவது?முடிந்த வரையில் எளிய முறையில் தருகிறேன். புரிந்துகொள்ள முயலுங்கள். இல்லையென்றாலும் பாதமில்லை; விட்டுவிடுங்கள்.இதோ வழி:9 க்குப் பின் A, B, C, D, E, F என்ற 6 எழுத்துக்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அது இப்படி அமையும்:0,1,2,3,4,5,6,7,8,9, A, B, C, D, E, Fசாதாரண எண் முறையில் 9 க்குப் பின் இடது புறம் 1 இட்டு அடுத்த தொகுதியின் தொடக்கமாக வலப்புறம் 0 இடுகிறோமோ(10 என்பதாக), அதே மாதிரி, 'பதினாறு வகை' எண்ணிக்கையில் 15 முடிந்தவுடன் (அதாவது F முடைந்த பின்னர்) ஒரு தொகுதி முடிந்ததின் அடையாளமாக இடப்புறம் 1 ம் அடுத்த தொகுதியின் தொடக்கமாக வலப் புறம் 0 உம் இட வேண்டும். அதாவது இந்த முறையில் 16 ஐக் குறிக்க வேண்டுமானால் 10 என்று எழுத வேண்டும். சரி சாதாரண எண் வரிசையிலும் 10 உண்டு 'பதினாறு வகை'யிலும் 10 உண்டு. இதை எவ்வாறு பிரித்தறிவது? இதற்கு 'பதினாறு வகை'எண் வரிசை என்பதை உணர்த்த HEX (hexadecimal) என்பதைச் சேற்க வேண்டும். அதாவது 'பதினாறு வகை' எண்ணிக்கையில் 16 ஐக் குறிக்க 10HEX என்று எழுத வேண்டும்.இனி, இந்த எண் முறையைக் கொண்டு எவ்வாறு வண்ணங்களைக் குறிக்கலாம் என்று பார்ப்போம். நான் ஏற்கெனவே எழுதிய புகைப்படக் கலை மற்றும் வண்ணக் கலவை பற்றிய ஆக்கங்களை நினைவு கூறுங்கள்.அடிப்படை வண்ணங்களான சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவற்றிலிருந்தே பிற வண்ணங்களை பெறுகிறோம் என்பதை நாம் அறிவோம். மஞ்சள் வண்ணத்தைப் பெற, சிவப்பையும் பச்சையையும் கலக்க வேண்டுமென்றும்; செந்நீலத்தைப்(megenta) பெற, சிவப்பையும் நீலத்தையும் கலக்க வேண்டுமென்றும்; நீலப்பச்சையைப்(cyan) பெற, நீலத்தையும் பச்சையையும் கலக்க வேண்டுமென்றும் அறிந்திருக்கிறோம். மற்ற வண்ணங்களும் அடிப்படை வண்ணங்களின் வேறுபட்ட விகிதக் கலவைகளே என்றும் அறிவோம். பட்டியில் இந்த எண்களை உபயோகிக்கும்போது சிவப்பு, பச்சை, நீலம்(RGB) என்ற வரிசை முறையைக் கையாள வேண்டும். ஒவ்வொரு வண்ணமும் 0 லிருந்து 256 அலவுகளால் அதாவது HEX இல் 00 இலிருந்து FF வரையான அளவுகளாக இருக்க வேண்டும்.ஓவ்வொன்றிற்கும் இரண்டிரண்டாக 6 இலக்கம் அல்லது எழுத்துக்களைக் கொண்டதாக இருக்கும். உதாரணமாக மஞ்சளுக்கு FFFF00 ஆக இருக்கும். இதில் முதல் FF சிவப்பையும், இரண்டாவது FF பச்சையையும் 00 நீலத்தையும் குறிக்கும். இங்கு நீலம் 00 என்றிருப்பதால், நீலத்தின் பங்கு ஏதுமில்லை என்று தெரிகிறது. இவ்வாறு இலக்கங்களை மாற்றி எண்ணற்ற வண்ணங்களை பெறலாம்.இனி பட்டியில் எவ்வாறு கையாளலாம் என்று பார்ப்போம். உதாரணமாக நம் மாதிரிப் படிவத்தின் பின்னரங்கின்(background) வண்ணத்தை மஞ்சளாக மாற்ற எண்ணுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். கீழ்க் கண்டவாறு பட்டியில் திருத்தம் செய்யவும்:இதில் கவனிக்க வேண்டியது, FFFF00 என்ற அலகுகளுக்கு முன் # இட வேண்டியது. படிவத்தில் மாற்றம் செய்து சோதிதுப் பாருங்கள். வெவ்வேறு அளவுகள்(எழுத்து F ஐத் தாண்டக் கூடாது) இட்டும் சோதிதுப் பாருங்கள்.குறிப்பு:இத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் சிறிய jpg கோப்பை நாம் சோதிதுக் கொண்டிருக்கும் படிவம் இருக்கும் அதே directory இல் சேமித்துக் கொள்ளவும்.படிவத்தின் பின்னரங்கின் வண்ணத்தை மாற்ற பட்டியில் bgcolor(BackGround color) என்பதைச் சேற்க வேண்டும் என்று கண்டோ ம். இவ்வாறே வார்ப்பின்(எழுத்துரு -font) வண்ணத்தை மாற்ற HEX எண் முறையைப் பயன் படுத்தலாம். வண்ணப் பெயர்களும் அவைகளுக்கான HEX மதிப்புக்களும் இந்த படிவத்தின் இறுதியில் தரப் பட்டிருக்கின்றன. பெயர்களையோ அல்லது அதன் மதிப்புக்களையோ பட்டிகளில் பாவிக்கலாம்.படிவத்தை மெருகூட்டும் சில விடயங்களைப் பார்த்துக் கொண்டிருகிறோம். இனி பின்னரங்கில் நீங்கள் விரும்பும் ஒரு படத்தை எவ்விதம் அமைக்கலாம் என்று பார்ப்போம். நாம் வண்ணம் தருவதற்குச் செய்தது போலவே பட்டியில் கீழ்க் கண்டவாறு சேர்க்க வேண்டும்:படிவத்தை சேமித்து உலவியில் பாருங்கள். உங்கள் படிவம் மேலும் மெருகூட்டப் பட்டதாக இருக்கும்.நாம் இங்கு பார்த்து வருவது, ஒருபடிவத்தை(document) மீயுரைகுறிமொழியில் (HTML) எவ்வாறு எழுதலாம் என்பதைப் பற்றியும் அதை எப்படி மெருகூட்டலாம் என்பது பற்றியும்தான்.இப்போது நீங்கள் உங்கள் வரவு செலவு கணக்கு(இதற்கும் HTML-ஆ என்று கேட்காதீர்கள்!) அல்லது ஒரு கவிதை எழுதுவதாக வைத்துக் கொள்ளுங்கள். கவிதையின் வரிகள் சற்று முன்னும் பின்னுமாக அமைய வேண்டி வரலாம். ஆனால் நம் மீயுரைகுறிமொழி, வெள்ளை இடைவெளிகளை வெட்டித் தள்ளிவிடும் என்று அறிவோம். உங்களுக்கு, நீங்கள் மூலத்தில் எவ்வகையில் எழுதுகிறீர்களோ, அம்மதிரியே உலவியிலும் காணவேண்டும். என்ன செய்யலாம்? இதற்கும் வழிதருகிறது ஒரு பட்டி. அதுதான்
       எனப்படும் (Predefined) பட்டி. 
       
      இவைகளுக்கு இடையில் எம்மாதிரி எழுதப் படுகின்றனவோ, உலவியிலும் அம்மாதரியே தோன்றும். கீழே காணும் பகுதியை வெட்டி ஒரு உரை தொகுப்பியில் (text editor) pre.html என்ற பெயரில்(அல்லது ஏதேனும் ஒரு பெயரில்) சேமித்து உலவியில் சோதிதுப் பாருங்கள்:

      இந்த பகுதி பட்டி இடப்படாத பகுதி

      கண்ணிருந்தும் கல்லாதார் வாழ்க்கை என்றும்காரிருளில் நடக்கின்ற செயெலேயாகும்
    • மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போலமாந்தருக்குள் ஒளிந்திருக்கும் திறனைக் காண
    • நுண்ணறிவை வெளிப்படுத்தும் கல்வி தேவைநுரைக்குமிழி போலதுவும் பொங்கு தற்கும்
    • எண்ணத்தை எடுத்தியம்பும் ஆற்ற லுக்கும்எழுத்தறிவே ஒளிவிளக்காய் மிளிர்ந்து நிற்கும்.
    • -கவிக் கொண்டல் மா. செங்குட்டுவன் 
    • இந்த பகுதி பட்டி இடப்பட்ட பகுதி

      கண்ணிருந்தும் கல்லாதார் வாழ்க்கை என்றும்காரிருளில் நடக்கின்ற செயெலே யாகும்
    • மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போலமாந்தருக்குள் ஒளிந்திருக்கும் திறனைக் காண
    • நுண்ணறிவை வெளிப்படுத்தும் கல்வி தேவைநுரைக்குமிழி போலதுவும் பொங்கு தற்கும்
    • எண்ணத்தை எடுத்தியம்பும் ஆற்ற லுக்கும்எழுத்தறிவே ஒளிவிளக்காய் மிளிர்ந்து நிற்கும்.
      -கவிக் கொண்டல் மா. செங்குட்டுவன்